புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணைக்கு சுவிஸ் மக்கள் ஆதரவு
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள பிரேரணைக்கு, பெரும்பான்மை மக்களிடையே ஆதரவு உள்ளது சமீபத்திய கருத்துக்கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
சுவிஸ் மக்கள் ஆதரவு
இந்நிலையில், அந்த பிரேரணை தொடர்பில் சுவிஸ் மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக்கணிப்பில், 52 சதவிகித சுவிஸ் மக்கள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக உள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் அந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரேரணைக்கு 46 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள், 2 சதவிகிதம் பேர் மட்டுமே பிரேரணை தொடர்பில் இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், புலம்பெயர்தல் வீடுகள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரேரணையை எதிர்ப்பவர்களோ, சுவிட்சர்லாந்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், போருளாதாரம் முதலான முக்கிய விடயங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஆக, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளதால் முடிவு எப்படியிருக்கப்போகிறது என்பது தெரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |