பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு
தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது.
Inheritance Tax
அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு நாடுகளில் சொத்து இருக்கும்பட்சத்தில், அதிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கும் அவர்கள் வாழும் நாட்டில் வரி செலுத்தவேண்டும் என்கின்றன சில நாடுகள். அது, சில நாடுகளில் Inheritance Tax என அழைக்கப்படுகிறது.

ஆனால், வேறு நாடுகளிலிருந்து எங்களுக்கு வரும் வருவாய்க்கு, நாங்கள் ஏன் இந்த நாட்டில் வரி செலுத்தவேண்டும், உங்கள் நாட்டில் எங்களுக்கு வரும் வருவாய்க்கு நாங்கள் வரி செலுத்துகிறோமே என்கிறார்கள் சம்பந்தப்பட்ட பணக்காரர்கள்.
அதையும் மீறி, இல்லை, உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கு நீங்கள் வாழும் நாட்டில் நீங்கள் வரி செலுத்தியே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தினால், நாங்கள் ஏன் உங்கள் நாட்டில் வாழ்கிறோம், பேசாமல் அப்படிப்பட்ட ஒரு வரி இல்லாத நாட்டுக்கே போய்விடுகிறோம் என வேறு நாடுகளுக்குப் புறப்படத் துவங்கியுள்ளார்கள் சம்பந்தப்பட்ட பணக்காரர்கள்.
சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு
இந்நிலையில், சுவிட்சர்லாந்திலும் Inheritance Tax தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது.
ஆனால், அப்படி ஒரு வரியை செலுத்தக் கட்டாயப்படுத்தினால், நம் நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பணக்காரர்கள் வேறு நாடுகளுக்குப் புறப்பட்டுவிடக்கூடும் என பயந்து, அந்த வரிக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
சொல்லப்போனால், சுவிட்சர்லாந்தின் ஒரு மாகாணத்தில்கூட இந்த வரிக்கு ஆதரவு இல்லை!

பணக்காரர்களுக்கு 50 சதவிகித Inheritance Tax வரி விதிக்கவேண்டும் எனக் கோரி இடதுசாரி அமைப்பு ஒன்று பிரேரணை முன்வைத்த நிலையில், 78.3 சதவிகித மக்கள் அதற்கு எதிராக வாக்களித்து அதை தோல்வியடையச்ச் செய்துவிட்டார்கள்.
அதாவது, இப்படி ஒரு வரி நம் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேண்டாம் என சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.
சுவிஸ் நிதி அமைச்சரான கரின் கெல்லர் சட்டரும், வெளிநாட்டவர்களுக்கு இப்படி ஒரு வரி விதிப்பது, நமது வரி அமைப்பை நடுநிலையற்ற ஒன்றாக மாற்றிவிடக்கூடும் என்றும், அதனால், வெளிநாட்டவர்களுக்கு நம் நாட்டின் மீதான ஈர்ப்பு பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |