சுவிட்சர்லாந்தில் 5 வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
சுவிட்சர்லாந்தில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு வரும் 2022 ஜனவரி முதல் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
சுவிஸ் சுகாதார அதிகாரிகள், ஐந்து முதல் பதினொரு வயது குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல் Pfizer மற்றும் BioNTech கோவிட்-19 தடுப்பூசியை வழங்கத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய குழந்தைகளுக்கு 2 டோஸ் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள், தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் பற்றிய அறிந்துகொண்டு தனிப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடலாம் என்று பொது சுகாதாரத்தின் மத்திய அலுவலகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
நாள்பட்ட நிலை காரணமாக ஏற்கனவே கடுமையான உடல்நல அபாயங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு இந்த பரிந்துரை குறிப்பாகப் பொருந்தும்.
அதேபோல், ஒரே வீட்டில் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முன்னுரிமையாக பரிந்துரைக்கப்படுகிறது.