வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கினால் கடும் தண்டனை: சுவிஸ் தேர்தல் விதிகளைக் கடுமையாக்க அழைப்பு
சுவிட்சர்லாந்து தேர்தலில் வெளிநாட்டவர்கள் தலையிடுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க சுவிஸ் அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கினால் தண்டனை
வெளிநாட்டவர்கள் நன்கொடை வழங்குவதன் மூலம் சுவிட்சர்லாந்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தற்போதைய சட்டத்தின்படி, வெளிநாட்டவர்களிடம் பணம் பெறுபர்களுக்கு 40,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால், அது போதாது என்கிறார் Jean Tschopp என்னும் நாடாளுமன்ற உறுப்பினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய குற்றங்களுக்கு ஒரு பில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் Tschopp, அதேபோல சுவிட்சர்லாந்திலும் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
Tschoppஇன் யோசனைக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |