ராணுவத்துக்கான செலவுகள்... மக்கள் தலையில் கைவைக்கும் சுவிஸ் அரசு
உக்ரைன் ரஷ்யப் போர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவது உலகம் அறிந்ததே.
ஆனால், ராணுவத்துக்கு செலவு செய்ய பணம் வேண்டுமே!
மக்கள் தலையில் கைவைக்கும் சுவிஸ் அரசு
பல ஐரோப்பிய நாடுகளைப்போல, சுவிட்சர்லாந்தும் தன் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

ஆனால், ராணுவத்துக்கான செலவுக்கு பணம் வேண்டும். ஆகவே, பணத்துக்காக வரியை அதிகரிக்கத் திட்டமிட்டது சுவிஸ் அரசு.
அதாவது, ராணுவத்திற்கான செலவுக்காக, VAT என்னும் மதிப்புக்கூட்டு வரியை அதிகரிக்க அரசு திட்டமிட்டது.
ஆனால், அதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது என்பது கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்தது.
ஆகவே, ராணுவ செலவுக்கான பணத்துக்கு என்ன செய்வது என யோசித்துவரும் அரசு, வேறு பல திட்டங்களை தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவற்றில் ஒன்று, பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது. அதாவது, ராணுவத்துக்காக, ஒரு வருடம் கூடுதலாக வேலை செய்யவேண்டும், பணி ஓய்வு பெறும் வயதை 66ஆக உயர்த்தவேண்டும் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தபால் துறை மற்றும் தகவல் தொடர்புத்துறையில் அரசுக்கு இருக்கும் பங்குகளை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ராணுவத்துக்காக செலவிடலாம் என்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |