தடுப்பூசி போடாதவர்களிடம் கட்டணம் வசூலிக்க சுவிஸ் அரசு திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு
தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனையை நிறுத்த சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுவிஸ் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள், ஆனால் புதிய வழக்குகள் இன்னும் நாள் ஒன்றிற்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதுவரை, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 7,30,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,400 பேர் நோயால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மருத்துவமனை கட்டமைப்புகளைப் பாதுகாப்பதே முன்னுரிமையாக உள்ளது.
இனி தடுப்பூசி போடாத மக்களைப் பாதுகாப்பது அரசின் முன்னுரிமையாக இல்லை.
பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதி அளிக்கும்.
ஆனால் அறிகுறிகள் இல்லாத தடுப்பூசி போடாதவர்கள் அக்டோபர் 1 முதல் கொரோனா சோதனைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.