சிறையில் அடைக்கப்படும் பணக்காரர்கள் தங்கள் செலவுக்கு தாங்களே பணம் கட்ட யோசனை
சுவிட்சர்லாந்தில், சிறையில் அடைக்கப்படும் பணக்கார கைதிகள், தங்களால் ஏற்படும் செலவுக்கு தாங்களே பணம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தங்கள் செலவுக்கு தாங்களே பணம் கட்ட வேண்டும்
சுவிஸ் சிறையில் அடைக்கப்படும் ஒரு கைதிக்காக அரசு சுமார் 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு செய்கிறது.
ஏழை மக்களுக்கு அரசு உதவுகிறது, பணக்காரர்களுக்கும் அப்படி செய்ய முடியாது.
ஆகவே, ஆண்டொன்றிற்கு 150,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் தங்களுக்காக அரசு செய்யும் செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று The Geneva Citizen’s Movement கட்சியைச் சார்ந்த டேனியல் சோர்மானி (Daniel Sormanni) என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அத்துடன், தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுக்கான செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |