ஐரோப்பாவிலேயே முதல் முறையாக... அனைவருக்கும் HPV தடுப்பூசி வழங்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து, தன் நாட்டு மக்களில் 9 முதல் 45 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவிலேயே முதல் முறையாக சுவிட்சர்லாந்து இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் கூறினாலும், உண்மையில் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியை வழங்கத் துவங்கிவிட்டன.
HPV தடுப்பூசி என்பது என்ன?
HPV என்பது, ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (Human Papillomavirus) என்பதன் சுருக்கமாகும்.
இந்த HPV வைரஸ், உடல் ரீதியில் நெருக்கமான உறவு கொள்வோருக்கிடையே பரவக்கூடியதாகும். விடயம் என்னவென்றால், பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளை உருவாக்குவதில்லை என்பதால், தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாமலே, சிலர் அதை மற்றவர்களுக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது.

இந்த HPV வைரஸ் குடும்பத்தில் பல வைரஸ்கள் உள்ளன. அவற்றில் சில வைரஸ்கள், இனப்பெருக்க உறுப்புகள் முதல், வாய், கழுத்து, தொண்டை, தலை ஆகிய உறுப்புகள் வரை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த தொண்டை, தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களால் ஆண்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள்.
ஆண்டுதோறும், 1,500 பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. பாதிக்கப்படுவோரில் அதிகம் பேர் ஆண்கள்.
ஆகவே, சுவிட்சர்லாந்தில் வாழும் 9 முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இந்த HPV தடுப்பூசியை வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |