உலகிலேயே அதிக காரமான மிளகாயை உண்ணும் சவால்: சுவிட்சர்லாந்தில் திகிலை ஏற்படுத்திய விடயம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே காரமான மிளகாயை உண்ணும் சவால் ஒன்று ஜேர்மனியிலும் சுவிஸ் பள்ளிகளிலும் திகிலை ஏற்படுத்தியது.
உலகிலேயே அதிக காரமான மிளகாயை உண்ணும் சவால்
கரோலினா ரீப்பர் (Carolina Reaper) என்பது உலகிலேயே அதிக காரமான மிளகாய் ஆகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த மிளகாயை உண்ணும் சவாலில் பங்கேற்று ஜேர்மனியில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள், சுவிஸ் பள்ளிகளிலும் அது குறித்த திகில் பரவியது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் மீண்டும் அந்த மிளகாய் தொடர்பில் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
ஆம், அந்த மிளகாயை ஸ்நாக்ஸ் போல சில நிறுவனங்கள் ஒன்லைனில் விற்பனை செய்கின்றன. வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் அவற்றை வாங்கவும் முடிகிறது.
இதற்கிடையில், அந்த மிளகாயை உண்ணும் சவாலில் பங்கேற்க சமூக ஊடகங்கள் வாயிலாக சிறுவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படுகிறது.
ஆனால், அவை, குறிப்பாக சிறுவர்களுக்கு, கடுமையான வலியையும், வயிற்றுப் பிடிப்பையும் சில நேரங்களில் மயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்கள் துறைசார் நிபுணர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |