சுவிஸ் சிறையொன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதொரு சம்பவம்
சுவிஸ் சிறையொன்றிலிருந்து மூன்று கைதிகள் தப்ப முயன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தப்ப முயன்ற கைதிகள்
ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில், Valais மாகாணத்திலுள்ள Sion என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்ப முயன்றுள்ளனர்.
அவர்கள் சிறையின் கூரையில் ஏற, அவர்களை கீழே இறக்க, 35 பொலிஸ் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தும் நிபுணர்கள், சிறப்பு அதிரடி பொலிசார் மற்றும் மோப்ப நாய்கள் படை என ஒரு பெரிய படையே களமிறங்கியுள்ளது.
ஒரு வழியாக, இந்த ஆபரேஷன் மதியத்துக்கு முன் முடிவுக்கு வந்துள்ளது.
மூன்று கைதிகளும் மீண்டும் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், காயமடைந்த கைதிகள் இருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அண்டை நாடான பிரான்சில், ஒரு கைதி விடுதலையான மற்றொரு கைதியின் பைக்குள் மறைந்து தப்பிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்னமும் தலைமறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |