நாடு முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகள்: சுவிட்சர்லாந்தில் 41 பேர் கைது
Swiss police arrest 41 people in global drug trafficking crackdown: போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் 12 மாகாணங்களிலுள்ள 84 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளின்போது, 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
41 பேர் கைது
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்புடைய ஒரு அமைப்பைக் குறிவைத்து, சுவிட்சர்லாந்தின் 12 மாகாணங்களிலும், வேறு ஏழு நாடுகளிலும், இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த ரெய்டுகளின்போது 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும், ஃபெடரல் பொலிஸ் அலுவலகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ரெய்டுகளின்போது, 2.3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ரொக்கமும், கிரிப்டோ கரன்சியும், 15 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட போதைக் கடத்தல் கும்பல், 2019ஆம் ஆண்டு முதல், லத்தீன் அமெரிக்காவிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களை ஐரோப்பாவுக்குக் கடத்தி வருவதை வழக்கமாகக் கொண்ட கும்பல் என நம்பப்படுகிறது.