சுவிட்சர்லாந்தில் கோவிட் விதிகளை மீறும் உணவகங்கள்., உரிமையாளர்கள் கைது; அரசுக்கு எதிராக வலுக்கும் ஆர்ப்பாட்டம்
சுவிட்சர்லாந்தில் கோவிட் சான்றிதழ்களை சரிபார்க்க மறுத்த உணவக உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்தனர்.
தங்கள் வாடிக்கையாளர்களின் கோவிட் சான்றிதழ்களை சரிபார்க்க மறுத்ததால், கடையை மூடுவதற்கான உத்தரவுகளை புறக்கணித்ததற்காக, சுவிஸ் மலை ஓய்வு விடுதியான Zermatt-ல் உள்ள மூன்று உணவக உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவருந்துபவர்களுக்கான கோவிட் சான்றிதழ் கடமைகள் குறித்த விதிமுறைகளை மீறியதற்காக, இரண்டு வாரங்களுக்கு உணவகத்தை மூடவேண்டும் என கன்டோனல் அரசாங்கத்தால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
Photo: Twitter @mass_voll
அதனைத் தொடர்ந்து உணவகத்தின் கதவுகள் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டு நுழைவாயிலின் முன் கான்கிரீட் கற்கள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு, கடந்த இரண்டு நாட்களாக பொலிஸார் மீண்டும் மீண்டும் சோதனைகளை நடத்தினர்.
ஆனால் உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்துள்ளனர். மேலும், அதிகாரிகளால் போடப்பட்ட கான்கிரீட் தடுப்புகளை அவர்கள் அலங்கரித்து மேம்படுத்தி வைத்துள்ளனர்.
இதனால் அந்த உணவகம், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரானவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கான தளமாக மாறியது. அங்கு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் மாஸ்-வோல் இயக்கம் உட்பட கோவிட் விதிகளை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடி அரசாங்கத்தின் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர்.
Photo: Keystone / Christian Beutler
இதனைத் தொடர்ந்து, அந்த உணவகம் உட்பட மற்ற இரண்டு உணவகங்களின் உரிமையாளர்களை சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கோவிட் சான்றிதழ் தேவை நடைமுறைக்கு வந்தததைத் தொடர்ந்து, Valais கன்டோனல் பொலிஸார், Zermatt பிராந்திய காவல்துறையுடன் இணைந்து, இந்த உணவகத்தை பலமுறை ஆய்வு செய்து, நிரூபிக்கப்பட்ட மீறல்களுக்காக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசு வழக்கறிஞர் அலுவலகம் இது குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Upcoming Photos credit: Twitter @mass_voll