சுவிஸில் இரவு பார்ட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது செய்த பொலிஸார்
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு
வடக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு முன்னதாக 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இத்தாலியை சேர்ந்த 22 வயது பெண் என்று தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது
நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பிறகும் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் ஜேர்மன் நாட்டு காவல்துறையின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனி ஆளாக நடத்தியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
எனினும் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் இரண்டு வகையான குண்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல்தாரி கைத்துப்பாக்கி மற்றும் தாக்குதலுக்கு உரிய பெரிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |