சுவிஸ் பெண் கவுன்சிலர் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில், இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டில், அதிகாரிகள் எக்கச்சக்கமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சுவிஸ் பெண் கவுன்சிலர்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், பெரிய போதைக் கும்பல் ஒன்றை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜெனீவாவிலுள்ள Grand Saconnex முனிசிபாலிட்டியின் கவுன்சிலராக இருக்கும் கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்.
அவரது வீட்டில், வார இறுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது, அவர் வீட்டில் கஞ்சா முதலான பலவகை போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன், அந்த வீட்டிலிருந்து 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.
இதில் மோசமான விடயம் என்னவென்றால், இந்த போதைக்கடத்தல் கும்பலின் தலைவரே அந்த கவுன்சிலரின் மகனான 35 வயது நபர்தான் என கருதப்படுவதுதான்!
கடந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெண், அவரது கணவர் மற்றும் அவரது மகன் உட்பட மொத்தம் ஒன்பது பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |