சுவிட்சர்லாந்தில் ஒரு வாரமாக காணாமல்போன நபர் பிணமாக மீட்பு! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
சுவிட்சர்லாந்தில் ஒரு வாரத்திற்கு முன்பு காணமால் போனதாக கூறப்பட்ட நபர் ஞாயிற்றுக்கிழமையன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 23 (சனிக்கிழமை) முதல் Schwyz நகரத்திலுள்ள கோல்டாவில் 73 வயது முதியவர் காணாமல் போயுள்ளார்.
தீவிர விசாரணைகள் இருந்தும், காணாமல் போன நபரின் இருப்பிடத்தை ஷ்விஸ் மாகாண காவல்துறையால் தெளிவுபடுத்த முடியவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 31) பிற்பகல் அந்த நபர் இறந்துவிட்டார் என தெரியவந்தது.
Schwyz காவல்துறையினர் அறிவித்ததன்படி, பொலிஸார் ஹெலிகாப்டல் மூலம் தேடியபோது, காணாமல் போனதாக சொல்லப்பட்ட ஓய்வூதியதாரரின் சடலம் Rigi-யில் உள்ள Ober Stockbann பகுதியில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டுது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
இந்த தேடுதல் வேட்டையில், Alpine Rescue Switzerland (ARS), ஏர் ஆம்புலன்ஸ், சூரிச் மற்றும் Schwyz ல் உள்ள கன்டோனல் பொலிஸ் மற்றும் ஃபெடரல் பொலிஸ் (fedpol) என சுமார் 20 அவசர சேவைகள் ஈடுபட்டன. அவர்களுக்கு மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் சூரிச் கன்டன் பொலிஸார் ஆதரவு அளித்தனர்.