மலையேற்றத்துக்குச் சென்றவர்களை சுற்றி வளைத்த சுவிஸ் பொலிசார்: பின்னணி
சுவிட்சர்லாந்தில், மலையேற்றத்துக்குச் சென்றவர்களை பொலிசார் சுற்றி வளைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
சுற்றி வளைத்த சுவிஸ் பொலிசார்
சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில் அமைந்துள்ள Wildhorn massif என்னும் மலைத்தொடரில் சுமார் 25 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்கள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைக்க, உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அவர்களை சுற்றி வளைத்தார்கள்.
அதற்குக் காரணம், அவர்கள் அணிந்திருந்த உடை. ஆம், அவர்கள் அனைவரும் நாஸிக்களின் சீருடை போல உடை அணிந்திருந்தார்கள்.
நாஸி அடையாளங்கள் பொறிக்கப்பட்ட அவர்களுடைய மேல் சட்டைகளை கழற்றச் சொன்ன பொலிசார், அவர்கள் சட்டைகளைக் கையளித்ததைத் தொடர்ந்து அவர்களை பயணிக்க அனுமதித்தார்கள்.
அந்தக் குழுவினர், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளைபோல் மீண்டும் செய்து காட்டுவது தங்களுக்கு வழக்கம் என்று கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை இப்படி நாஸி சீருடை அணிவது குற்றம் இல்லை என்பதால், அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |