விதிகளை மீறியதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு மன்னிப்பு
சுவிட்சர்லாந்தில், வேகக்கட்டுப்பாட்டை மீறிய பெண் பொலிசார் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விதி மீறிய பொலிசாருக்கு தண்டனை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், வேகக்கட்டுப்பாட்டை மீறியதாக, 2017ஆம் ஆண்டு, பெண் பொலிசார் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
280 மணி நேரம் ஊதியம் இல்லாமல், சமூக சேவை செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அவரது சந்தர்ப்ப சூழலைக் கருத்தில் கொண்டு, தற்போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த பெண் பொலிசார், கார் ஒன்றைத் திருடிச் சென்ற ஒரு குழுவைத் துரத்திச் சென்றார்.
அப்போது அவர், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்லவேண்டிய சாலையில், 102 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் துரத்திச் சென்ற கும்பல், ஏற்கனவே ஜெனீவாவில் 48 வாகனங்களைத் திருடிய வன்முறைக் கும்பல் என தெரியவந்ததையடுத்து அந்தப் பெண் பொலிசாருக்கு மன்னிப்பு வழங்க The Geneva Grand Council Pardons Committee என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |