சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய வயாக்ரா மாத்திரைகள்... பின்னர் தெரியவந்த உண்மை
சுவிஸ் அதிகாரிகள் 346 பாக்கெட் சட்டவிரோத மருந்துகளை கைப்பற்றியுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை போலி வயாக்ரா மத்திரைகள் என்பது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்து முதலான 55 நாடுகள் இணைந்து, உலகம் முழுவதும் நடத்திய ஆபரேஷன் ஒன்றில், சுவிஸ் அதிகாரிகள் 695 பார்சல்களை சோதனையிட்டார்கள்.
அவற்றில் சட்ட விரோத மற்றும் போலி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. சிக்கிய பாக்கெட்களில் பத்தில் ஒன்பதில் போலி வயாக்ரா மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போலி மருந்துகளால் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுவிஸ் அதிகாரிகள், ஒன்றில் அவற்றின் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் பாக்கெட்டுக்குள் இல்லை, அல்லது தேவையான அளவை விட குறைவான மருந்து பாக்கெட்களில் அடைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆபரேஷனில் உலகம் முழுவதும் ஒன்பது மில்லியன் பாக்கெட்கள் போலி மற்றும்
சட்டவிரோத மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 113,000 சட்டவிரோத இணையதளங்களும்
முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.