புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை: சுவிஸ் பொலிஸ் துறை எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், அதனால் சுவிஸ் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என சுவிஸ் பொலிஸ் துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பொலிஸ் துறைத் தலைவர்கள் எச்சரிப்பு
இந்நிலையில், புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், அதனால் சுவிஸ் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என சுவிஸ் பொலிஸ் துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
No to 10 Million Switzerland பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு வெற்றி பெற்றால், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய பொலிஸ் தரவுத்தளத்தை பயன்படுத்துவது முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள் பொலிஸ் துறைத் தலைவர்கள்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பாவுக்குள்ளேயே ஒரு தனித்தீவாக மாறிவிடும் என்றும், குற்றச்செயல்களும், பயங்கரவாதமும், ஆட்கடத்தலும் நடப்பதற்கு சாதகமான ஒரு இடமாக மாறிவிடக்கூடும் என்றும் பொலிஸ் துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |