தென்னாபிரிக்காவில் இருந்து நுழைய தடை விதிக்க வேண்டும்: சுவிட்சர்லாந்தில் எழுந்த கோரிக்கை
புதிய வீரியம் மிக்க பொஸ்வானா மாறுபாடு காரணமாக எழுந்த அச்சத்தால் தென்னாபிரிக்காவில் இருந்து நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுவிஸ் அரசியல்வாதிகளால் எழுப்பப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பொஸ்வானா தொற்றானது உலக அளவில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் பிட்காயின் உள்ளிட்ட நாணயங்களும் சரிவை சந்தித்துள்ளன. நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் துரித நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவில் இருந்து சுவிஸ் திரும்பும் பயணிகளுக்கும், விமான சேவைகளுக்கும் தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.
இன்னொரு ஊரடங்கை நாடு எதிர்கொள்வதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பலனளிக்கும் என்கிறார்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள்.