சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு அமோக விளைச்சல்: ஆனால் ஒரு பிரச்சினை
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால், அதனாலும் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை
சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு அறுவடை கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 450,000 டன் உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அறுவடை செய்த உருளைக்கிழங்குகளை சேமித்துவைக்க போதுமான வசதி இல்லை. ஆகவே, பல விவசாயிகள் கூடுதல் உருளைக்கிழங்குகளை கால்நடைகளுக்கு உணவாக அளித்துவருகிறார்கள்.
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில் மட்டுமே 1,500 டன் உருளைக்கிழங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உருளைக்கிழங்கு எக்கச்சக்கமாக உள்ளது என்பதற்காக அதை குறைந்த விலைக்கு விற்றால், அது விலை வீழ்ச்சியைத் தூண்டிவிடும் என சுவிஸ் உருளைக்கிழங்கு விளைவிப்போர் யூனியன் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, விற்கப்படாத விளைபொருட்களுக்கு பகுதி மானியம் வழங்கப்படும். என்றாலும், அது வேதனையை அளிப்பதாக உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |