மகாராணியாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்: சுவிஸ் ஜனாதிபதி...
பிரித்தானிய மகாராணியாரின் மறைவுச் செய்தி கேட்டு, தான் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியார், 1980ஆம் ஆண்டு, தனது கணவரான இளவரசர் பிலிப்புடன் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, பிரித்தானிய மகாராணியாரின் மறைவுக்கு தன் ஆழ்ந்த இரங்கலையும், ராஜகுடும்பத்துக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மரியாதைக்குரிய பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளேன் என்று கூறியுள்ள Ignazio Cassis, சுவிஸ் பெடரல் கவுன்சில் சார்பாகவும், சுவிஸ் மக்கள் சார்பாகவும், பிரித்தானிய ராஜகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மகாராணியார் எப்போதுமே ஒரு வலிமையான பெண்மணியாகவும், நிலையான தலைவராகவும் நினைவிலிருப்பார் என்றும் கூறியுள்ளார்.
A great honour to meet Her Majesty The Queen ?? This sign of friendship between our countries symbolises the close and long-standing ties between #Switzerland and the #UK. My best wishes for the Platinum Jubilee year! pic.twitter.com/MjP72B8JL2
— Ignazio Cassis (@ignaziocassis) April 28, 2022
ஏப்ரலில் லண்டன் சென்றிருந்தபோது மகாராணியாரை தான் சந்தித்ததாகவும், அவரை சந்தித்தது மிகப்பெரிய கௌரவம் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், 1980ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அரசுமுறைப் பயணமாக, தனது கணவரான இளவரசர் பிலிப்புடன் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.