கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுவிஸ் ஜனாதிபதியின் கருத்துகள்
சமீபத்தில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஐரோப்பா குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் பல நாடுகளில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாக சுவிஸ் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளதால், அவர் பிற சுவிஸ் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் சர்ச்சைக் கருத்துக்கள்
அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ், சமீபத்தில் ஜேர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற மியூனிக் மாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது அவர், ஐரோப்பாவில் ஜனநாயகமும் சுதந்திரமும் அபாயத்திலிருப்பதாக தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
JD வேன்ஸின் பேச்சைக் கேட்டு மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
ஆனால், ஊடகவியலாளர்களிடம் பேசிய சுவிஸ் ஜனாதிபதியான கரின் கெல்லர் ஸட்டர் (Karin Keller Sutter) மட்டும், JD வேன்ஸின் கருத்துக்கள் மிகவும் சுதந்திரமான பேச்சு, அவரது கருத்துக்கள் சுவிட்சர்லாந்தின் கருத்துக்களைப்போலவே உள்ளன, மக்களுக்கு செவிகொடுங்கள் என்கிறார் JD வேன்ஸ், என்று கூறியுள்ளார்.
சுவிஸ் ஜனாதிபதியான கரின் கெல்லர் ஸட்டரின் கருத்துக்கள் சுவிஸ் கிரீன்ஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளன.
JD வேன்ஸின் கருத்துக்கள் ஐரோப்பாவுக்கும், சட்டத்தின் விதிக்கும் எதிரானவை என்றும், ஸட்டரின் கருத்துக்கள் சுவிட்சர்லாந்தை அதன் முக்கிய கூட்டாளரான ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து தனிமைப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்கள் சுவிஸ் கிரீன்ஸ் கட்சியினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |