சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய ஜனாதிபதி ஆதரவு
சுவிஸ் ஜனாதிபதி வியோலா ஆமெர்ட் (Viola Amherd) அக்டோபர் 28-ஆம் திகதி, சுவிஸ்-ஆயுதங்களை உக்ரைனுக்கு மற்ற நாடுகள் மறு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடை நீக்கப்படவேண்டும் என தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய வியோலா, "தனிப்பட்ட முறையில் நமது தொழில்துறைக்கு முன்னேற்றம் தேவை என்று நான் நம்புகிறேன்.
ஆனால், நெதர்லாந்து போன்ற நாடுகள் சுவிஸ் உற்பத்தி ஆயுதங்களை ஏன் வாங்கவேண்டாம் என முடிவு செய்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் சுவிஸ் அவற்றை மறு ஏற்றுமதி செய்ய சுதந்திரம் அளிக்கவில்லை," என்று அவர் கூறினார்.
அதே சமயம், சுவிஸ் யுத்தநிலையிலுள்ள நாடுகளுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்காது என்ற தன் நாட்டின் நிலைப்பாட்டை அவர் உறுதிபடுத்தினார்.
மேலும், கடந்த 30 வருடங்களில் ஐரோப்பிய பாதுகாப்பில் மேற்கொண்ட முதலீடுகள் போதுமானதாக இல்லையெனவும், இனி அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதெனவும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான முப்பரிமாண போரை நடத்திவரும் நிலையில், சுவிஸ் தனது பாரம்பரிய நடுநிலைமையைக் கைவிட வேண்டும் என்ற அழைப்புகள் உள்ளகத்திலும் வெளிநாடுகளிலும் அதிகரித்து வருகின்றன.
இதனால், சுவிஸ் பாராளுமன்றம் ஆயுத மறு ஏற்றுமதி விதிகளை தளர்த்த பரிந்துரைத்தது. ஆனால், அரசு இதை ஏற்க மறுத்தது.
சர்வதேச மாநாடுகளில், சுவிஸ் உக்ரைனின் அவசர சேவைக்கு முதலாவது GCS 200 வாகனத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiss president supports lifting ban on arms re-export to Ukraine, Swiiss Arms export to Ukraine