வாழ்க்கை எளிதாக இருக்காது... தடுப்பூசி போடாதவர்களுக்கு சுவிஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
தடுப்பூசி போடாதவர்களுக்கு வாழ்க்கை எளிதாக இருக்காது என சுவிஸ் ஜனாதிபதி Guy Parmelin எச்சரிக்கை விடுத்துள்ளார்.
SonntagsZeitung-க்கு அளித்த நேர்காணலில் சுவிஸ் ஜனாதிபதி Guy Parmelin கூறியதாவது, சுவிஸில் தடுப்பூசியை கட்டாயமாக்க நாங்கள் விரும்பவில்லை.
தடுப்பூசி போடுவதற்கு நாம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி போடுவது உண்மையில் பொறுப்பான செயல் என தடுப்பூசி போடாதவர்களுக்கும் இப்போது தெளிவாகியிருக்கும்.
அப்போதும், அவர்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், தற்காலிகமாக சில செயல்பாடுகளுக்கு சத்தியமில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்னும் பலர் நோய்த்தடுப்பு ஊசி போடாததால், தடுப்பூசி போட்டவர்களின் சுதந்திரத்தை நாம் பறிக்க முடியாது.
தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போட்டதின் மூலம் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும், தொற்றுநோயைக் குறைக்கவும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்.
இது தடுப்பூசி போடுவதற்கு விருப்பமில்லாத பலரை நம்ப வைக்கும் என்று நம்புகிறோம் என Guy Parmelin தெரிவித்துள்ளார்.