உலகத்தையே கலங்கவைத்துள்ள நபருடன் சுவிஸ் ஜனாதிபதி: தவறான நேரத்தில் வெளியான புகைப்படத்தால் சர்ச்சை
சுவிஸ் ஜனாதிபதி ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வேறெந்த நாட்டின் தலைவர்களும் ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சந்தித்துக் கைகுலுக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள விடயம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுவிஸ் ஜனாதிபதி ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவுப்பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது, எரிபொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் எப்படி எதிர்வரும் குளிர்காலத்தை சமாளிப்பது என்று தெரியாமல் அச்சத்துடன் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrovஉடன் கைகுலுக்கும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருவரும் சந்தித்தாகவும், அந்த சந்திப்பின்போது, ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டாலும், உக்ரைனில் இன்னமும் போர் நீடிக்கும் இந்த நேரத்தில் சுவிஸ் ஜனாதிபதி ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் படம், தூதரக உறவு ரீதியில் தவறாக பார்க்கப்படலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இதுபோல இரு நாடுகளின் பிரதிநிதிகள் கைகுலுக்கிக் கொள்வது சாதாரணமான ஒன்று என்றும், ஆகவே, சுவிஸ் ஜனாதிபதி ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் படத்தை அசாதாரணமான ஒன்றாகப் பார்க்கத் தேவை இல்லை என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், வேறெந்த நாட்டின் தலைவர்களும் ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சந்தித்துக் கைகுலுக்கும் புகைப்படங்கள் எதுவுமே வெளியாகவில்லை என்பதுதான்!