கொள்ளையன் ஒருவனுக்கு சுவிட்சர்லாந்துக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை: சுவிஸ் வரலாற்றில் முதல் நிகழ்வு
சுவிட்சர்லாந்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஏ டி எம் இயந்தியம் ஒன்றை வெடிவைத்துத் தகர்த்த கொள்ளையன் ஒருவனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில், கொள்ளையர்கள் சிலர் ஏ டி எம் இயந்திரம் ஒன்றை வெடிவைத்துத் தகர்த்து, 126,600 சுவிஸ் ஃப்ராங்குகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் அந்த கொள்ளையர்களில் ஒருவராகிய ரொமேனியா நாட்டைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவரின் DNA சிக்கியதைத் தொடர்ந்து, அவர் ஆஸ்திரியா நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டார்.
அவருக்கு தற்போது 74 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது ஏற்கனவே அவர் 552 நாட்களை சிறையில் செலவழித்துவிட்ட நிலையில், மீதமுள்ள தண்டனைக்காலம் முடிந்ததும், அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.
அத்துடன், அதற்குப் பின் 10 ஆண்டுகளுக்கு அவர் சுவிட்சர்லாந்துக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இப்படி ஏ டி எம் இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்துக் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அத்தகைய கொள்ளையன் ஒருவனுக்கு இப்படி தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.