குடியுரிமை பெறுவதை மேலும் கடினமாக்க விரும்பும் சுவிஸ் மாகாணம்
உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம் என்பது கிட்டத்தட்ட எல்லோரும் அறிந்த விடயம்.
இந்நிலையில், குடியுரிமை பெறுவதை மேலும் கடினமாக்க சுவிஸ் மாகாணம் ஒன்ற விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடினமான விதிகளைக் கொண்ட மாகாணம்
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணம் ஏற்கனவே கடினமான குடியுரிமை விதிகளைக் கொண்ட ஒரு மாகாணம். அம்மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், முந்தைய 10 ஆண்டுகளில் அரசிடமிருந்து எந்த உதவியும் பெற்றிருக்கக்கூடாது என அம்மாகாணத்தில் விதி உள்ளது.
© Aaftab Sheikh | Dreamstime.com
இந்நிலையில், குடியுரிமை பெறுவதற்கான மொழித் தகுதியை அதிகரிக்கவும், குற்றப் பின்னணி தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் அம்மாகாணம் முடிவு செய்துள்ளது.
விதிகளைக் கடுமையாக்க வாக்களித்துள்ள நாடாளுமன்றம்
நடைபெற்ற மாகாண நாடாளுமன்ற வாக்கெடுப்பில், குடியுரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச மொழித்தகுதியை, பேசுவதில், B1இலிருந்து B2 ஆகவும் எழுதுவதில் A2 ஆகவும் அதிகரிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக 69 உறுப்பினர்களும், எதிராக 63 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
அத்துடன், குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கெதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக 73 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.