புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வாக்களித்த சுவிஸ் மாகாணம்
சுவிஸ் மாகாணமான சூரிச்சில் வாழும் வெளிநாட்டவர்கள் கல்வி பெறுவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதி ஒன்று நடைமுறையில் உள்ளது.
அந்த விதியை நீக்க அரசு திட்டமிட்ட நிலையில், அது தொடர்பிலான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வாக்களித்த சுவிஸ் மாகாணம்
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் இருப்பவர்களே என்று கூறிய சூரிச் நாடாளுமன்றம், ஆகவே, அவர்களை எதற்காக காத்திருக்கவைக்கவேண்டும், அவர்களுக்கு விரைவாக கல்வி அளிப்பதுதானே சிறந்தது என்று கூறியுள்ளது.
ஆனால், புலம்பெயர்தலைக் கடுமையாக எதிர்த்துவரும் அரசியல் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேரணை ஒன்றை முன்வைத்தது.
அதாவது, வெளிநாட்டவர்கள் கல்வி பெறுவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற ஐந்து ஆண்டுகள் காத்திருக்கத்தான்வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்துகிறார்கள்.
சூரிச் மாகாணம் புகலிடக்கோரிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் மாகாணமாக இருக்கக்கூடாது என்கிறது அக்கட்சி.
அத்துடன், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அந்த பிரேரணையில் மக்களிடம் கையெழுத்து பெறவில்லை அக்கட்சி.
அதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடாமே கையெழுத்துக்களைப் பெற்றது சுவிஸ் மக்கள் கட்சி.
பிரேரணை வெற்றி பெற 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போதும். சுவிஸ் மக்கள் கட்சிக்கு, Federal Democratic Union, மற்றும் Liberal கட்சி ஆகியவை ஆதரவளிக்க, மிக எளிதாக வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டது பிரேரணை.
ஆக, வெளிநாட்டவர்கள் கல்வி பெறுவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற ஐந்து ஆண்டுகள் காத்திருக்கத்தான்வேண்டும் என முடிவாகிவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |