புகலிடக்கோரிகையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுவிஸ் பொதுமக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்
சுவிஸ் மாகாணமொன்றில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றை மூட அரசியல் கட்சி ஒன்று முயன்று வருகிறது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, அம்மாகாண மக்கள் அந்த அரசியல் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர் மையத்தை மூட முயலும் அரசியல் கட்சி
ஜெனீவாவிலுள்ள Plan-les-Ouates என்ற இடத்தில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று உள்ளது. சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி, அந்த புகலிடக்கோரிக்கையாளர் மையத்தை மூட முயற்சி செய்துவருகிறது. அதற்காக, அக்கட்சி ஒரு புகார் மனுவை உருவாக்கி, கையெழுத்துக்களைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
மக்கள் எதிர்ப்பு
ஆனால், சுவிஸ் மக்கள் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்களில் 85 பேர், சுவிஸ் மக்கள் கட்சி, காரணம் எதுவுமில்லாமல் மக்களுக்கு பயத்தை உருவாக்க முயன்று வருவதாகக் கூறி, அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
அத்துடன், கடினமான சூழல்கள் காரணமாக தங்கள் நாடுகளிலிருந்து தப்பி வரும் மக்களை தாங்கள் வரவேற்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |