ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சினை: பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மாணவர்கள்
சுவிட்சர்லாந்தில், ஆசிரியர் ஒருவருக்கு காசநோய் இருப்பது தெரியவந்ததால், அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சினை
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Dorénaz என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு காசநோய் (tuberculosis) இருப்பது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சிகிச்சை பெறத்துவங்கியுள்ள அவர், தற்போது அந்த பள்ளியில் பணியாற்றவில்லை.
Keystone-SDA
என்றாலும், அவர் பயிற்றுவித்த மாணவர்களுக்கு காசநோய்த்தொற்று பரவியுள்ளதா என்பதை அறிவதற்காக மாணவர்கள் மருத்துவப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
அப்படி அந்த மாணவர்களில் யாருக்காவது காசநோய் இருப்பது தெரியவந்தால், அவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.
அத்துடன், அந்த ஆசிரியருடன் தொடர்பிலிருந்த மற்ற ஆசிரியர்களுக்கும் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |