சுவிஸ் ரயில்வே சேவை தொடங்கி 175 ஆண்டுகள் நிறைவு! பழைய ரயிலில் பயணித்து கொண்டாடிய மக்கள்..
சுவிஸ் ரயில்வே நாட்டின் பயணிகள் ரயில் சேவைகளின் 175-வது ஆண்டு நிறைவு விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடியது.
ஆகஸ்ட் 9, 1847 அன்று முதல் ரயில் சேவையானது சூரிச்சை வடமேற்கில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேடன் வரை பயணித்தது. நீராவி இன்ஜின் கொண்ட இந்த முதல் பயணம் 33 நிமிடங்கள் எடுத்தது.
எனவே சுவிஸ் ரயில்வே சேவை தொடங்கி செவ்வாய்க்கிழமையோடு 175 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
போக்குவரத்து அமைச்சர் சிமோனெட்டா சொம்மருகா மற்றும் சுமார் 150 விருந்தினர்கள் சிறப்பு ரயிலில் சூரிச்சிற்கு வந்து ஆண்டு நிறைவைக் கொண்டாடினர், இதில் வரலாற்று சிறப்புமிக்க வண்டிகள் மற்றும் நீராவி இன்ஜின் ஆகிய இடம்பெற்றன.
© Keystone / Alexandra Wey
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சொம்மருகா “ரயில் எங்கள் அடிப்படை சேவையின் ஒரு பகுதியாகும். இது மக்களை ஒன்றிணைக்கிறது மற்றும் நம் நாட்டில் ஒற்றுமையை பலப்படுத்துகிறது”என்று கூறினார்.
சூரிச் மற்றும் பேடன் இடையேயான பாதை 16 மாதங்களில் கட்டப்பட்டது. அசல் பாலங்களில் ஒன்று இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
இவ்வழித்தடத்தில் இப்போது பயணம் 15 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சுவிஸ் ரயில் நெட்வொர்க்கில் ஆல்ப்ஸ் மலையின் கீழ் சுரங்கங்கள் உட்பட பல சுவாரஸ்யமான பொறியியல் சாதனைகள் உள்ளன.