சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்
Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
வடக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆராவர் ரேவ்
தாக்குதல் நடத்திய நபரை இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து, காவல்துறை பெரிய அளவில் களமிறங்கியுள்ளது. 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, அதிகாலை 3 மணிக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுவிஸ் நாளிதழான 'பிளிக்' (Blick) தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற வருடாந்திர டெக்னோ பார்ட்டியில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பந்தய மைதானத்தில்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரும் மக்கள் கூட்டத்திற்குள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றே ரம்போல்ட் குறிப்பிட்டுள்ளார். மரணமடைந்தவர் 22 வயது பெண் என்றே தெரிய வருகிறது.

ஆராவ் நகரம், சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு ஏறத்தாழ 23,000 மக்கள் வசிக்கின்றனர். மட்டுமின்றி, இது ஜேர்மனியுடனான எல்லையிலிருந்து 25 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ளது.
ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். இருப்பினும், வன்முறைத் துப்பாக்கிச் சூடுகள் அரிதாகவே நிகழ்கின்றன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |