ரஷ்ய சொத்துகளை விடுவித்துள்ள சுவிஸ் அரசாங்கம்:சொத்து முடக்கம் முக்கிய நடவடிக்கை அல்ல என அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை கண்டித்து இதுவரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடைசெய்த 6.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளில் இருந்து 3.4 பில்லியன் பிராங்குகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7ம் திகதி அரசாங்கம் முடக்கியதாக அறிவித்த சுமார் 7.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகளில் இருந்து இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகத்தின் (SECO) பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பொலிங்கர், "எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றால் நாங்கள் நிதியை முடக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "உறைந்த சொத்துக்களின் அளவு, பொருளாதாரத் தடைகளை எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கான அளவீடு அல்ல, என்றும் சொத்து முடக்கம் என்பது பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளில் மிக முக்கியமான நடவடிக்கை அல்ல என்றும் பொலிங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கவனிக்கும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆணையமான அமெரிக்க ஹெல்சிங்கி கமிஷன், சுவிட்சர்லாந்தை "ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஒரு முன்னணி உதவியாளர்" என்று மே மாத தொடக்கத்தில் அறிவித்தது.
REUTERS/Arnd Wiegmann
கூடுதல் செய்திகளுக்கு: ”கோட்ட கோ காம” போராட்டம் தொடரும்... இலங்கை பிரதமர் அறிவிப்பு!
இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்த சுவிஸ் அரசாங்கம், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கனிடம் சுவிஸ் ஜனாதிபதி இக்னாசியோ காசிஸ் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இந்த தவறான எண்ணத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.