உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பாரிய வறட்சி: சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
உலகம் முழுவதும் பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உலகம் முழுவதும் அதிகரித்துவரும் வறட்சி
கடந்த 40 ஆண்டுகளாக, உலகின் பல பாகங்களில், பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
1980க்கும் 2018க்கும் இடையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு சராசரியாக ஆண்டொன்றிற்கு 50,000 சதுர மீற்றர்கள் என்கிறது அந்த ஆய்வு.
இந்த நிலப்பரப்பின் அளவு, மொத்த சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்பையும் விட அதிகமாகும்.
Keystone-SDA
வனம், பனி மற்றும் நிலப்பரப்புக்கான சுவிஸ் ஃபெடரல் நிறுவனத்தின் ஆய்வமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வறட்சிகளுக்குக் காரணம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு காரணம் என்கிறது அந்த ஆய்வு.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வால் மழை மற்றும் பனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மற்றும் மண் மற்றும் தாவரங்களிலிருந்து நீராவியாதல் அதிகரிப்பது ஆகியவையே இந்த வறட்சிகளுக்கு காரணம் என்கின்றன அந்த ஆய்வின் முடிவுகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |