சுவிட்சர்லாந்தில் வாழும் அதிக கல்வித் தகுதியுடைய புலம்பெயர்ந்தோர்: ஆனால் வேலை கிடைப்பதில்...
சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களைவிட, புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் வேலை கிடைக்காதவர்கள் இரண்டு மடங்கு அதிகம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் வேலை கிடைக்காதவர்கள் 7 சதவிகிதம். அதுவே, அப்படி புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களில் வேலை கிடைக்காதவர்கள் 3 சதவிகிதம் மட்டுமே என்கிறது பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம்.
இத்தகவலை நேற்று வெளியிட்ட அந்த அலுவலகம், அதே நேரத்தில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 2016இல் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் வேலை கிடைக்காதவர்கள் 7.8 சதவிகிதம் ஆகும்.
அப்படி புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் வேலை கிடைக்காதவர்களில் 80 சதவிகிதத்தினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்.
ஆனால், வேலை கிடைத்துவிட்டாலோ, இந்த புலம்பெயர்ந்தோர் நல்லபடியாக முன்னேறிவிடும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது அதே செய்தி.
மேலும், புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களைவிட, புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் மேலாளர் மட்டத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான் குறைவு. புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் மேலாளர் மட்டத்தில் பணியாற்றுபவர்கள் முதல் தலைமுறையினர் 32 சதவிகிதம், இரண்டாம் தலைமுறையினர் 33 சதவிகிதம். புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களில் மேலாளர் மட்டதில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 35 சதவிகிதம்தான்!
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில், முதல் தலைமுறையினர் குறிப்பிடத்தக்க அளவில் தாங்கள் பார்க்கும் வேலைக்கு அதிக தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களை ஒப்பிடும்போது, overqualifiedஆக உள்ளார்கள்.
புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில், முதல் தலைமுறையினரில் 19 சதவிகிதத்தினர் கற்றிருக்கும் கல்வி, அவர்கள் பார்க்கும் வேலைக்கான தகுதியைவிட அதிகம்! குறிப்பாக இந்த தரப்பினரில் பெண்கள் அதிக கல்வித் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்த தகவல்களை வெளியிட்டுள்ள பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம், இந்த இரு தரப்பினரில், அதாவது புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் மற்றும் புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்கள் என்ற ஒரு விடயம் மட்டுமின்றி, அவர்களது வயது, எந்த அளவு கல்வி கற்றுள்ளார்கள் என்பது போன்ற விடயங்களும் கூட இரு தரப்பினருக்குமான வேறுபாடுகளுக்குக் காரணம் என்பதையும் மறந்துவிடக்கூடாது என எச்சரிக்கிறது.