விதியையும் மீறக்கூடாது... வியாபாரமும் செய்தாகவேண்டும்: சில சுவிஸ் உணவகங்களின் சமயோகித முடிவு
சுவிட்சர்லாந்தில் செப்டம்பர் 13 முதல் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் சென்று உணவருந்தவேண்டுமானால் கொரோனா சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தடுப்பூசி பெற்றவர்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்று வைத்துள்ளவர்கள் மட்டுமே உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் சென்று உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள். அவர்களது கொரோனா சான்றிதழ்களை உணவக ஊழியர்கள் சரிபார்ப்பார்கள்.
ஆக, கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்ற விதியையும் மீறக்கூடாது, வியாபாரமும் நடந்தாகவேண்டும். அப்போதுதானே வருவாய் வரும்! என்ன செய்வது? என யோசித்த சில சுவிஸ் நிறுவனங்கள் சமயோகிதமாக ஒரு முடிவை எடுத்துள்ளன.
மழையோ, கடுங்குளிரோ என்றால், அவர்கள் பார்சல் சேவை மட்டும் செய்கிறார்கள். அந்த வழியிலும் விதிகள் மீறப்படவில்லை.
ஒருவர் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து ஒரு புது யுக்தியைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆம், உணவகத்துக்கு வெளியே கேபிள் கார் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி, ஒரு கேபினுக்குள் ஒரே ஒரு மேஜையை மட்டும் போட்டு வைத்திருக்கிறார் அவர்.
கொரோனா சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த கேபினுக்குள் அமர்ந்து உணவருந்தலாம். என வாடிக்கையாளர்களுக்கு உணவு இல்லை என்று சொல்ல எனக்கு மனமில்லை. ஆகவேதான் இந்த ஏற்பாடு என்கிறார் அந்த உணவக உரிமையாளரான Nicoline Anjema Robin.