காட்டுத்தீ அபாயம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
சுவிட்சர்லாந்தில், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களின்போது பல சுவிஸ் மாகாணங்கள் வாணவேடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளன.
சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் போன்ற நாடுகள் தீயை அணைக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன.

விடயம் என்னவென்றால், ஆகத்து மாதம் 1ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
வழக்கமாக தேசிய தினத்தின்போது நாடு முழுவதும் வாணவேடிக்கைகள் நடத்தப்படுவதுண்டு.
ஆனால், இம்முறை, பிரெஞ்சு மொழி பேசும் ஆறு சுவிஸ் மாகாணங்களிலும், காட்டுத்தீ அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, தனிப்பட்ட முறையில் மக்கள் வாணவேடிக்கைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா ஏரி, Neuchâtel மற்றும் Murten ஏரிக்கரைகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக, உரிமம் பெற்ற தொழில்முறை வாணவேடிக்கை நிபுணர்கள் வாணவேடிக்கைகள் நடத்த இருக்கிறார்கள்.
Valais மற்றும் Fribourg மாகாணங்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், பட்டாசு விற்பனைக்கே மொத்தமாக தடை விதித்துவிட்டன.
அத்துடன், யாராவது பட்டாசு வெடித்தாலோ, திறந்த வெளிகளில் தீப்பற்றவைத்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |