ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை... எதிர்ப்பு தெரிவிக்கும் சுவிஸ் வியாபாரிகள்
சுவிட்சர்லாந்தில், ஆண்டுக்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் திறந்திருக்கும் வகையில் விதிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசின் திட்டத்துக்கு சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை...
சுவிட்சர்லாந்தில், தற்போது, ஆண்டுக்கு நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.

அதை ஆண்டுக்கு ஆண்டுக்கு 12 ஞாயிற்றுக்கிழமைகளாக அதிகரிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது ஆடம்பரம் அல்ல, அது கடைகளில் வேலை செய்வோரின் உடல் நலனுக்கும், அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அத்தியாவசியம் என்கின்றன சில்லறை வர்த்தகர்கள்.
ஆகவே, அரசின் திட்டத்துக்கு எதிராக புகார் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 9,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
பிரச்சினை என்னவென்றால், கணவனும் மனைவியும் முழுநேர வேலைக்குச் செல்லும் பல குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் கடைகளுக்குச் செல்ல முடிகிறது.
ஆக, ஞாயிற்றுக்கிழமைகளில் கடை இல்லை என்றால் அவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |