சுவிட்சர்லாந்தில் தடை செய்யப்பட்ட பிறகும் விற்கப்படும் நச்சு பொருட்கள்! எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்தில் சில்லறை விற்பனையாளர்கள் இன்னும் தடை செய்யப்பட்டிருக்கும் நச்சுத் தட்டுகளை விற்பனை செய்துவருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் 30 ஜூன் 2021 அன்று, பிளாஸ்டிக் மற்றும் மூங்கில் கலவையில் இருந்து தயாரிக்கப்பட்ட தட்டுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (FSVO) அறிவித்தது மற்றும் அதன் விற்பனை தடைசெய்யப்பட்டது.
இருப்பினும், சில குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த தட்டுகள், சுவிட்சர்லாந்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்களிடம் விற்பனைக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு மொழி பேசும் பிராந்திய நுகர்வோர் சங்கம் FRC தெரிவித்துள்ளது.
மூங்கில் கொண்டிருக்கும் தட்டுகள், ஃபார்மால்டிஹைட் மற்றும் மெலமைன் (formaldehyde and melamine) ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, இது அந்த தட்டில் பரிமாறப்படும் உணவில் கலந்துவிடும் தண்மை கொணடாவை, குறிப்பாக சூடாகும்போது கலந்துவிடும்.
இந்த தயாரிப்புகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் தடையைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்று FRC தெரிவித்துள்ளது.
RTS-ல் தொடர்பு கொண்டு,அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும் தகவல்களுடன் தொடர்புகொள்வது கடினம் என்று FSVO-ன் Barbara Pfenniger கூறுகிறார்.
குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு தயாரிப்பு மற்றும் உணவு தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் இல்லாத மற்றும் தேவையான அறிவு இல்லாத மற்றும் அத்தகைய தயாரிப்புகளுடன் தொடர்புடைய சட்டத் தேவைகள் தெரியாத சில்லறை விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது என்று வர குற்றம் சாட்டினார்.
கன்டோனல் வேதியியலாளர்கள் மற்றும் உணவு ஆய்வாளர்கள், சில்லறை விற்பனையாளர்களை ஆய்வு செய்கிறார்கள்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், குழந்தை பராமரிப்பு சில்லறை விற்பனையாளர்கள், தளபாடங்கள் கடைகள், கியோஸ்க்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என அனைத்து வகையான கடைகளும் இதில் ஈடுபட்டுள்ளன.
தடைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு மண்டலங்கள் பொறுப்பு. மேலும் அதனை சரிபார்ப்பு வழிநடத்தவேண்டும் என்று Pfenniger கூறினார் .
தட்டுகள் மற்றும் கிண்ணங்கள் மூங்கில் கலந்த ஃபார்மால்டிஹைட் பிசினிலிருந்து (formaldehyde resin) தயாரிக்கப்படும் மென்மையான பிளாஸ்டிக் போன்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வரலாற்றில் பல பிரச்சனைகளை கொண்டுள்ளது.
2008-ஆம் ஆண்டில், கடினமான பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் தட்டுகளில் காணப்படும் ஒரு பொதுவான இரசாயனமான BPA (Bisphenol A) இன் உடல்நல அபாயங்கள் தலைப்புச் செய்திகளாக அமைந்தன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள BPA , பிளாஸ்டிக்கை கடினமாக்க பயன்படுகிறது. இது தண்ணீர் பாட்டில்கள், தட்டுகள் மற்றும் உணவு மற்றும் பானம் கேன்களின் புறணிகளில் உள்ளது. BPA என்பது ஒரு அறியப்பட்ட நாளமில்லா குறுக்கீடு ஆகும்.
US Food and Drug Administration (FDA) ஒருமுறை பாதுகாப்பானது என்று கருதி, 2010-ல் அதன் எண்ணத்தை மாற்றி, பிறக்காத மற்றும் சிறு குழந்தைகளின் மூளை, நடத்தை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளில் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தது.
2015-ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பின்பற்றி, சுவிட்சர்லாந்து பொம்மைகளில் BPA
அளவுகளில் வரம்புகளை அறிமுகப்படுத்தியது மற்றும் குழந்தை பாட்டில்களில் அதன் பயன்பாட்டை தடை செய்தது .

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022