மத்திய கிழக்கிலிருக்கும் சுவிஸ் குடிமக்களுக்கு சுவிஸ் அரசின் செய்தி
இஸ்ரேலிலிருக்கும் அமெரிக்கக் குடிமக்களை இப்போதைக்கு அங்கிருந்து வெளியேற்ற இயலாத நிலையில் இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.
அதேபோல, மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் தன் குடிமக்களை அங்கிருந்து அழைத்துவர இயலாத நிலையில் இருப்பதாக சுவிட்சர்லாந்தும் தெரிவித்துள்ளது!
மத்திய கிழக்கிலிருக்கும் சுவிஸ் குடிமக்களுக்கு ஒரு செய்தி
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்களை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவர இயலாத நிலையில் இருப்பதாக சுவிஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர்களை மத்திய கிழக்கிலிருந்து அழைத்துக்கொண்டுவர வழியில்லை என்று கூறியுள்ள சுவிஸ் அரசு, என்றாலும், சுவிஸ் மக்களை எப்படியாவது அழைத்துக்கொண்டுவர என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 4,000 சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், ஆனால், அதைவிட அதிக எண்ணிக்கையிலான சுவிஸ் மக்கள் அங்கு வாழ்ந்துவருவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
சுவிஸ் குடிமக்களில் அதிகம் பேர், தோராயமாக 5,000 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்கிறார்கள். இஸ்ரேலிலோ, 25,000க்கும் அதிகமானோர் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |