41 பேரின் உயிரைப் பறித்த தீவிபத்து: சுவிஸ் மதுபான விடுதியின் நிலை என்ன?
சுவிட்சர்லாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீவிபத்து நாட்டையே உலுக்கிய விடயம் நினைவிருக்கலாம்.
41 பேரின் உயிரைப் பறித்த தீவிபத்து
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில், புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியானார்கள். பலியானவர்களில் பாதி பேர் இளைஞர்கள்.

உயிரிழந்தவர்கள் நினைவாக, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அந்த மதுபான விடுதி இருந்த இடத்தில், மீண்டும் ஒரு மதுபான விடுதி திறக்கப்படாது என Valais மாகாணத் தலைவரான Christophe Darbellay தெரிவித்துள்ளார்.

மாறாக, அந்த இடம் இளைஞர்கள் நலனுக்காக என ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அந்த வழக்கு தொடர்பில், அந்த மதுபான விடுதி உரிமையாளர்கள் உட்பட 14 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |