சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கு உகந்தது சுவிஸ் பள்ளிகளா அல்லது சர்வதேச பள்ளிகளா?
சுவிட்சர்லாந்துக்கு குடிபெயரும் வெளிநாட்டவர்கள் மனதில் எழும் ஒரு மிகப்பெரிய கேள்வி, பிள்ளைகளை சுவிஸ் மாகாணப் பள்ளிகளில் சேர்ப்பதா அல்லது சர்வதேசப் பள்ளிகளில் சேர்ப்பதா என்பதாகும்.
இந்தக் கட்டுரை அந்தக் கேள்விக்கு விடையளிக்க முயல்கிறது...
நீங்கள் எவ்வளவு காலம் சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கப்போகிறீர்கள்?
நீங்கள் குறைவான காலத்துக்கே சுவிட்சர்லாந்தில் வாழ்ப்போகிறீர்கள், விரைவில் மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவிடப்போகிறீர்கள் என்றால், சர்வதேசப் பள்ளி உங்கள் பிள்ளைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
மொழியும் ஒருங்கிணைந்து வாழ்தலும்
சுவிட்சர்லாந்திலுள்ள சர்வதேசப் பள்ளிகளைப் பொருத்தவரை, அவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியில்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் ஆங்கிலத்துடன் வேறொரு உள்ளூர் மொழியும் கற்கவேண்டும் என்ற நிலை இருந்தாலும், பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகளையும் அந்தப் பள்ளிகள் வழங்கும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்கள் என்றால், அல்லது சுவிட்சர்லாந்திலேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வது அவசியமாகும். சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கும் அது சாத்தியம்தான் என்றாலும், மாகாணப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு அது மிகவும் எளிதானதாக அமையும், காரணம், அங்கு உள்ளூர் மொழியிலேயே கல்வி பயிற்றுவிக்கப்படும் என்பதால்தான்.
மேலும், இப்படி மாகாணப் பள்ளிகளில் படிப்பது, உங்கள் பிள்ளைகள் சுவிஸ் மாணவ மாணவியரை சந்தித்து, அவர்களுடன் அளவளாவி, உள்ளூர் மொழியில் பேசி பயிற்சி பெற வசதியாக இருக்கும். காரணம், பெரும்பாலான சுவிஸ் மக்கள் தங்கள் பிள்ளைகளை மாகாணப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கிறார்கள்.
இதுபோக, பெரும்பாலான மாகாணப் பள்ளிகள், சர்வதேச மாணவர்களுக்கு கூடுதலாக மொழிப் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகின்றன.
கல்விக்கட்டணம்
சுவிட்சர்லாந்தில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகம். அதே நேரத்தில், மாகாணப் பள்ளிகளிலோ கல்வி இலவசம் என்பது கூடுதல் நல்ல தகவல்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |