கடலுக்கடியில் மர்மமான உலகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.., வியக்க வைக்கும் தகவல்
சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு கடலுக்கடியில் மர்மமான இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மூழ்கிய உலகம்
சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு "மர்மமான இடத்தை" கண்டுபிடித்துள்ளனர். அவை பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் "மூழ்கிவிட்ட உலகம்" என்று அழைக்கப்படுகின்றன.
வானியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் விண்வெளியின் மர்மங்களை அவிழ்ப்பதிலும், பிரபஞ்சம் முழுவதும் உள்ள தொலைதூர கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் வாழ்விடங்களைத் தேடுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு "மர்மமான இடத்தை" கண்டுபிடித்துள்ளனர். அவை பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் "மூழ்கிவிட்ட உலகம்" என்று அழைக்கப்படுகின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மர்மமான இடங்கள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பகுதி உருவாகும் போது உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மேலும் கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் பூமிக்குள் அடர்த்தியான பொருள் உருவானதன் விளைவாக உருவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பின் உண்மையான அடையாளம் குறித்து விஞ்ஞானிகளால் உறுதி செய்ய முடியவில்லை.
சுவிஸ் புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் உட்புறத்தை வரைபடமாக்கும் புதிய முறை (உள் அலைகளை பகுப்பாய்வு செய்தல்) மூலம் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு சாத்தியமானது.
மேலும், இந்த கண்டுபிடிப்பு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற தாழ்த்தப்பட்ட அடுக்குகளிலிருந்து வேறுபட்டது என்கின்றனர். ஏனெனில் அவற்றின் கண்டுபிடிப்பு டெக்டோனிக் செயல்பாடு உள்ள பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது.
இந்த குழுவானது, பூமியின் உட்புறத்தின் உயர் தெளிவுத்திறன் மாதிரியை உருவாக்க நில அதிர்வு தரவைப் பயன்படுத்தியது. ஃபுல்-வேவ்ஃபார்ம் இன்வெர்ஷனைப் பயன்படுத்தி, பல நில அதிர்வு மதிப்பு ஒருங்கிணைக்கப்பட்டது.
இது, சுவிட்சர்லாந்தின் லுகானோவில் உள்ள சுவிஸ் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் உள்ள "பிஸ் டெய்ன்ட்" சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.
இந்த அற்புதமான கண்டுபிடிப்பு அவர்களின் முயற்சிக்கு ஊக்கமளித்துள்ளது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் உள்ள குமிழ்களுக்குப் பின்னால் உள்ள மர்மம் தீர்க்கப்படாமல் உள்ளது என்று சுவிஸ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சுவிஸ் புவியியல் நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான தாமஸ் கூறுகையில்," இந்த கண்டுபிடிப்பு ஊக்கமளிக்கும் வேளையில், இது என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதனை விரிவாகப் படித்து மேலும் ஆழமான ஆராய்ச்சி செய்து வருகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |