சுவிஸ் செனேட் தேர்தல்: சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைக் கொண்ட கட்சிக்கு பின்னடைவு
சுவிட்சர்லாந்தில் நேற்று நடைபெற்ற செனேட் தேர்தலில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைக் கொண்ட கட்சி ஒன்றிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர்தலுக்கெதிரான பிரச்சாரத்தை முன்வைத்த கட்சிகள்
சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். புகலிட சட்டங்களை கடுமையாக்குவதும், புலம்பெயர்தலைக் குறைப்பதும்தான் அதன் புலம்பெயர்தல் கொள்கைகள்.
© Keystone / Walter Bieri
புலம்பெயர்தல் குறித்து தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் அக்கட்சி, வெளிநாட்டவர்கள், காப்பீடு மற்றும் பிற சமூக உதவிகள் பெறுவதன் மூலம், சுவிஸ் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக கருதுகிறது.
கடந்த மாதம் நடந்த பெடரல் கவுன்சில் தேர்தலில் இந்த கட்சி அமோக வெற்றி பெற்றதால் புலம்பெயர்ந்தோர் கவலையடைந்தார்கள்.
பின்னனடைவு
இந்நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தில் செனேட் தேர்தல், அதாவது, நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், சுவிஸ் மக்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி, Aargau, Zurich மற்றும் Solothurn ஆகிய மூன்று மாகாணங்களில் தனது இருகைகளை இழந்துவிட்டது..
ஆக, தற்போதைய செனேட்டில், The Centre கட்சிக்கு 15 இருக்கைகளும், The Radical-Liberal கட்சிக்கு 11 இருக்கைகளும், Social Democratic கட்சிக்கு 9 இருக்கைகளும் கிடைத்துள்ளன. சுவிஸ் மக்கள் கட்சிக்கு 6 இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |