திருமண அபராதம்... முடிவுக்குக் கொண்டுவரும் சுவிட்சர்லாந்தின் திட்டம் நிறைவேறுமா?
சுவிட்சர்லாந்தில், திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
திருமண அபராதம்
சுவிட்சர்லாந்தில், தனிநபர் செலுத்தும் வரியை விட, திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அதிக வரி செலுத்தும் நிலை உள்ளது.

ஆகவே, அதை திருமண அபராதம் (marriage penalty) அல்லது திருமண வரி என்கிறார்கள்.
இந்நிலையில், இந்த திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் சுவிஸ் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
மார்ச் மாதம் 8ஆம் திகதி, இந்த திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
திட்டம் நிறைவேறுமா?
விடயம் என்னவென்றால், ஆரம்ப கட்ட கருத்துக்கணிப்புகளில், இந்த திருமண அபராதத்தை ஒழிப்பதற்கு 53 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், தற்போது அந்த ஆதரவு குறைந்துவருகிறது. ஆகவே, திருமண அபராதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டம் நிறைவேறுவது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |