போர்ச்சூழல் காரணமாக ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நடுநிலை நாடு
சுவிட்சர்லாந்து, சமீப காலமாக தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சுவிஸ் அரசு
ஐரோப்பாவில் நிலவும் போர்ச்சுழல் காரணமாக, நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து, சர்வதேச நாடுகளுடன் ஆயுதங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்வதில் ஆர்வம் காட்டிவருகிறது.
அவ்வகையில், ஆயுதங்கள் தொடர்பில் சிங்கப்பூர் நாட்டுடன் புரிந்துணர்தல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த ஒப்பந்தம், ஆயுதங்கள் தொடர்பில் இரு நாடுகளும், குறிப்பாக, ட்ரோன்கள், ரோபோ தொழில்நுட்பம் முதலான விடயங்களில் ஒன்றுக்கொன்று ஆழ்ந்து ஒத்துழைப்பதை சாத்தியப்படுத்தும்.
விடயம் என்னவென்றால், ரஷ்ய உக்ரைன் போரில், நேட்டோ நாடான அமெரிக்கா உக்ரைனுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள விடயம், பல ஐரோப்பிய நாடுகளை தங்கள் பாதுகாப்பு குறித்து யோசிக்கவைத்துள்ளது.
ஆகவே, தங்கள் பாதுகாப்புக்காக, தங்கள் ராணுவத்தை வலுப்படுத்துவதில் ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தும், தான் நடுநிலை நாடாகவே இருந்தாலும், ஐரோப்பாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச கூட்டாளர்களுடனான உறவை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் தனது பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |