சுவிஸ் ராணுவ வீரர்கள் வெடிமருந்துகளை வீட்டில் சேமித்து வைக்க அனுமதி! நாடாளுமன்றக் குழு ஆதரவு
சுவிஸ் நாட்டு ஆயுதப்படை வீரர்கள் தங்களது தனிப்பட்ட ஆயுதங்களுக்கான சொந்த வெடிமருந்துகளை தங்கள் வீட்டிலேயே சேமித்து வைப்பதற்கான அனுமதி வழங்க சுவிஸ் நாட்டின் செனட் பாதுகாப்புக் கொள்கை குழு ஆதரவளித்துள்ளது.
ராணுவ கொள்கை மீதான முக்கிய மாற்றத்திற்கு செனட்டர் வெர்னர் சால்ஸ்மேன் முன்வைத்த தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்வதற்கு பாதுகாப்புக் கொள்ளை குழு பரிந்துரைத்துள்ளது.

சுவிஸ் நாடாளுமன்ற சேவைகளால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த பரிந்துரை, தற்போது மேல் பரிசீலனைக்காக பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையின் முக்கிய அம்சமாக, ஆயுதப்படை வீரர்கள் தங்கள் தனிப்பட்ட ஆயுதங்களுடன் பாக்கெட் வெடிமருந்துகளை சேமித்து வைப்பதற்காக மீண்டும் வழங்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

2007ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உத்தரவின் பேரில், அனைத்து பாக்கெட் வெடிமருந்துகளும் தனிப்பட்ட வீரர்களின் வீடுகளில் சேமித்து வைக்கப்படுவதற்கு பதிலாக ராணுவ மையத்தில் சேமித்து வைக்க கட்டளையிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |