உக்ரைன் அகதிகளுக்கு சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி!
உக்ரைன் அகதிகளுக்கு சிறப்பு விசா வழங்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு விசா உள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு எவ்வித தடையும் இன்றி தங்கலாம், அதன்பிறகு அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதில் பாதுகாப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த விசா நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்படலாம்.
S Visas, என்று அழைக்கப்படும் இந்தவகை விசாக்கள் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இந்த விசாவின் மூலம் வேலைவாய்ப்புக்கு அனுமதி கிடைக்கும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் மற்றும் ஷெங்கன் பகுதி முழுவதும் தடையின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள அதே அமைப்புகளுடன் நேற்று சுவிட்சர்லாந்தின் விசாக்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதுவரை சுமார் 2,000 உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ளனர், இன்னும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் Karin Keller-Sutter கூறுகையில், உக்ரைனில் இருந்து "எத்தனை பேர் வருவார்கள் அல்லது எப்போது வருவார்கள் என்பதை அறிய வழி இல்லை என்பதால் நாம் நடைமுறை மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும், எனவே நாம் சூழ்நிலைக்கு ஏற்ப்ப எதிர்வினையாற்ற முடியும்" என்றார்.
உக்ரைனுக்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமைகள் காரணமாக, வருபவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதே ஒருங்கிணைப்புக்கான திறவுகோலாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அகதிகளை ஆதரிப்பதற்கான செலவுகளில் கன்டோன்களுக்கு மத்திய அரசு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.