பள்ளிக்கு விடுப்பு எடுப்பதற்காக கொரோனா பரிசோதனையில் சுவிஸ் மாணவர்கள் செய்யும் ஏமாற்று வேலை: எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்
பள்ளிக்கு விடுப்பு எடுப்பதற்காக, கொரோனா பரிசோதனை கிட்டில் சுவிஸ் மாணவர்கள் செய்யும் ஏமாற்று வேலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர்கள் தங்கள் கொரோனா பரிசோதனை கிட்டில் (COVID-19 Test Kit) ஆரஞ்சுச் சாறு அல்லது கோலாவின் சில துளிகளை சேர்க்கிறார்களாம்.
ஆரஞ்சுச் சாற்றில் உள்ள அமிலத்தன்மை கிட்டுடன் ரியாக்ட் செய்ய, கொரோனா பாஸிட்டிவ் என்று காட்டுகிறதாம் அந்த கொரோனா கிட்கள்.
வெறும் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் ஆரஞ்சுச் சாறு அல்லது மற்ற குளிர்பாங்கள் மூலம் இந்த ஏமாற்றுவேலையைச் செய்து பள்ளிக்கு பல நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்களாம் மாணவர்கள்.
இதற்கிடையில், 2021இலேயே இந்த வித்தை பிரித்தானியாவில் துவங்கிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக் போன்ற சில சமூக ஊடகங்கள் மூலம் இந்த விடயம் வெளியே வர, இப்போதுதான் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இப்படி ஒரு விடயம் செய்யப்படுவதே தெரியவந்துள்ளதாம்.
ஆனாலும், தங்கள் மாணவர்களை விட்டுக் கொடுக்காத சுவிஸ் ஆசிரியர்கள், சுவிஸ் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையே விரும்புபவர்கள் என்றும், அதனால் அவர்கள் அப்படி ஏமாற்று வேலையிலெல்லாம் ஈடுபடமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.